Homeசெய்திகள்இந்தியாவயது காரணமாக அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்: 80 வயதாகிவிட்டது என சித்தராமையா திட்டவட்டம்!

வயது காரணமாக அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்: 80 வயதாகிவிட்டது என சித்தராமையா திட்டவட்டம்!

-

- Advertisement -

கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினருமான சித்தராமையா, வயது காரணமாக வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். எனக்கு இப்போது 80 வயதாகிறது. இந்த வயதில் என்னால் எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்? அதனால்தான் வரவிருக்கும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியுள்ளேன்” என்றார்.

பின் வரிசையில் அமர்ந்தது ஏன்? சித்தராமையா விளக்கம்

சோனியா காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் சித்தராமையா பின் வரிசையில் அமர வைக்கப்பட்டதாக எழுந்த விவாதம் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “நான் அந்த நிகழ்ச்சிக்கு தாமதமாகத்தான் சென்றேன். தாமதமாக வந்ததால் பின்னால் அமர்ந்தேன். இது தொடர்பாக ஏற்கனவே அறிக்கை வெளியிட்டுவிட்டேன்” என்று தெரிவித்தார்.

கர்நாடக காங்கிரஸில் தொடரும் அரசியல் விவாதம்

கர்நாடக காங்கிரஸ் அரசியலில் சித்தராமையாவுக்கும், தற்போதைய முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், சித்தராமையா அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்படுவதாகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் அவரது தற்போதைய கருத்துகள் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

முன்னதாக, வயது மூப்பு, உடல்நலக் காரணங்கள் மட்டுமின்றி, தேர்தல் அரசியலில் அதிகரித்து வரும் பணபலம் மற்றும் ஊழல் சூழலையும் சுட்டிக்காட்டி, 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சித்தராமையா அறிவித்திருந்தார்.

அரசியலிலிருந்து ஓய்வு.. சில்வர் ஸ்கிரீனில் ரீ-என்ட்ரி: முதல்வர் கதாபாத்திரத்தில் களமிறங்கும் முன்னாள் முதல்வர் சித்தராமையா!

MUST READ