spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபடப்பிடிப்பை நிறைவு செய்து ஜனவரியில் சென்னை திரும்பும் விடாமுயற்சி படக்குழு

படப்பிடிப்பை நிறைவு செய்து ஜனவரியில் சென்னை திரும்பும் விடாமுயற்சி படக்குழு

-

- Advertisement -
துணிவு படத்திற்கு பிறகு அஜித் தனது 62 வது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார்.அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் விடாமுயற்சி திரைப்படத்தை தடையறத் தாக்க தடம் கழகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்க உள்ளார். லைக்கா நிறுவனம் இதனை தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்பு மற்றும் மோஷன் போஸ்டரை பட குழுவினர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

இதற்காக, விடாமுயற்சி பட குழுவினர் அஜர்பைஜான் சென்றுள்ளனர். அங்கு மூன்று மாதங்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ஹுமா குரேசி, ஆரவ் சஞ்சய்தத் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது
இந்நிலையில், அஜர்பைஜானில் முழு படப்பிடிப்பையும் டிசம்பரில் நிறைவு செய்து ஜனவரி மாதம் படக்குழு சென்னை திரும்பும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ