spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"யார் எதிர்த்தாலும் நீட் விலக்கு நிறைவேறும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“யார் எதிர்த்தாலும் நீட் விலக்கு நிறைவேறும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
Live Image

எந்த பதவியில் இருப்பவர்கள் எதிர்த்தாலும் நீட் விலக்கு எனும் நம் இலக்கு நிறைவேறும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

“எல்லை மீறுகின்ற ஆளுநர்களுடைய தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது”- கே.எஸ்.அழகிரி விமர்சனம்!

சென்னையில் நடைபெற்ற சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “எந்த பதவியில் இருப்பவர்கள் எதிர்த்தாலும் நீட் விலக்கு எனும் நம் இலக்கு நிறைவேறும். நீட் தேர்வை ரத்துச் செய்ய முடியாது என்ற ஆணவத்தோடு யார் பேசினாலும் நீட் விலக்கு நிறைவேறும்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு எனும் இலக்கு மக்கள் பேராதரவுடன் நிறைவேறியே தீரும். நாட்டை மீட்டு ஆரோக்கியமாக்குவதற்கு அதிகபட்சமாக இன்னும் 6 மாதம் தேவையாக இருக்கிறது. நீட் விலக்கு, மருத்துவக் கல்வியில் மாநிலத்தின் உரிமை உள்ளிட்ட போரில் நாம் நிச்சயம் வெல்வோம். கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

“காமராசர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி”- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதற்கு மத்திய அரசுத் தடை விதிக்கும் போக்கையும் எதிர்த்தோம். நீட்டை எதிர்க்கும் நேரத்தில் நெக்ஸ்ட் எனும் அடுத்த ஆபத்தையும் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பை இந்தியாவின் வேறெந்த மாநிலத்தோடும் ஒப்பிடவே முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ