
எல்லை மீறுகின்ற ஆளுநர்களுடைய தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை மாநாட்டில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “அரசுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எல்லை மீறுகின்ற ஆளுநர்களுடையை தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக ‘அய்யன்’ செயலி அறிமுகம்!
ஆளுநர் ஆர்.என்.ரவி போன்றவர்களுக்கு இந்த இழுக்கு தேவையில்லை என்பது என் கருத்து. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தமிழக ஆளுநர் சதி திட்டத்தில் இறங்கியுள்ளார். ராஜினாமா செய்வது தான் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்கு அழகு” எனத் தெரிவித்துள்ளார்.