ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் தேவரா என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இதனை நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து ஜான்வி கபூர், சைஃப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து படத்தில் வில்லனாக நடிக்கும் சைஃப் அலிகானின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது. அவர் பைரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் தமிழ் பிரபலம் கலையரசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் பிரசாந்த் நீலுடன் இணைய உள்ளார். 31-வது திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். கேஜிஎஃப் வெற்றிக்கு பிறகு இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாக இயக்குநராக பிரசாந்த் நீல் உருவெடுத்துள்ளார். ஜூனியன் என்டிஆருடன் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்குகிறது. தற்போது சலார் படத்தை பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார்.