spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரீ ரிலீஸில் ரஜினியை ஓவர் டேக் செய்த கமல்ஹாசன்

ரீ ரிலீஸில் ரஜினியை ஓவர் டேக் செய்த கமல்ஹாசன்

-

- Advertisement -
கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் மற்றும் ரஜினிகாந்த் நடித்த முத்து ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரி ரிலீஸ் ஆன நிலையில், ஆளவந்தான் திரைப்படத்தின் வசூல் முத்து பட வசூலை முறியடித்துள்ளது.

2001ம் ஆண்டு கமல் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழ் மட்டுமன்றி இந்தியிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கமலின் மாறுபட்ட நடிப்பில் வெளியான இத்திரைப்படம் தற்போது பேசப்படுகிறது. இதனிடையே, ஆளவந்தான் திரைப்படம் சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 8-ம் தேதி திரையரங்குளில் ரி ரிலீஸ் ஆனது.

இதேபோல, ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான முத்து திரைப்படமும் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருந்த இத்திரைப்படத்தில் மீனா, சரத்பாபு, ராதா ரவி, ரகுவரன், செந்தில், வடிவேலு என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்த திரைப்படமும் அதே நாளில் மறு வெளியீடு ஆனது.
we-r-hiring

இந்த இரு படங்களில் கமல் நடித்த ஆளவந்தான் திரைப்படம் இதுவரை சுமார் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் முத்து திரைப்படம் 23 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது. கமல் மற்றும் ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் திரையரங்கம் சென்று படம் பார்க்கின்றனர்.

MUST READ