spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை அடக்கம்!

தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை அடக்கம்!

-

- Advertisement -

 

தே.மு.தி.க. அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நாளை அடக்கம்!

we-r-hiring

உடல்நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க.வின் தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (வயது 71) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்த் மறைவுக்கு நடிகை த்ரிஷா, குஷ்பு இரங்கல்

அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் கட்சியின் தொண்டர்களின் அஞ்சலிக்காக, விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்று (டிச.28) காலை 11.00 மணிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடலுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து

இந்த நிலையில், நாளை (டிச.29) மாலை 04.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

MUST READ