spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'நிச்சயமாக அஜித்தை வைத்து படம் பண்ணுவேன்'..... இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

‘நிச்சயமாக அஜித்தை வைத்து படம் பண்ணுவேன்’….. இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

-

- Advertisement -

'நிச்சயமாக அஜித்தை வைத்து படம் பண்ணுவேன்'..... இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!தொடர்ந்து ஸ்டைலிஷான பல ஹிட் படங்களை இயக்கியதால் இளைஞர்களிடையே ஃபேவரைட் இயக்குனராக மாறிவிட்டார் லோகேஷ் கனகராஜ். தினம் தினம் லோகேஷ் கனகராஜ் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவருடைய இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள படங்களுக்கும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் உள்ளன. தலைவர் 171,கைதி 2, விக்ரம் 2, லியோ 2, ரோலக்ஸ் என ஒரு பிரம்மாண்டமான லைன் அப்களை கைவசம் வைத்துள்ளார். குறிப்பாக விஜய், விஜய் சேதுபதி, கமல், கார்த்தி, சூர்யா, ரஜினி என தமிழ் சினிமாவின் முக்கியமான பல டாப் நடிகர்களை இயக்கி விட்டார் லோகேஷ். இந்நிலையில் அவர் எங்கு சென்றாலும் அவரை விடாமல் துரத்தி வருகிறது ஒரு கேள்வி. அஜித்தை வைத்து எப்போது படம் இயக்கப் போகிறார் லோகேஷ்? என்பதுதான் அந்தக் கேள்வி. சமீபத்திய விழா ஒன்றிலும் இக்கேள்வி லோகேஷிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள லோகேஷ், “நிச்சயமாக அஜித் சாருடன் ஒரு படத்தில் பணியாற்றுவேன். எனக்கும் அந்த பெரிய ஆசை இருக்கிறது. சரியான நேரம் வரும் பொழுது அஜித் சாரை சந்தித்து நிச்சயமாக அவரை வைத்து ஒரு படம் இயக்குவேன்” என்று கூறியுள்ளார். 'நிச்சயமாக அஜித்தை வைத்து படம் பண்ணுவேன்'..... இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தற்போது மகிழ்த்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ