spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்... தீவிர சிகிச்சை...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்… தீவிர சிகிச்சை…

-

- Advertisement -
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, முக்கிய போட்டியாளர் ஒருவர் இதய பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

திரைப்படங்களை தாண்டி மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகம் விரும்பத் தொடங்கி இருக்கின்றனர். அதில் முக்கியப் பங்கு வகிக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை பலரும் இந்நிகழ்ச்சியை தினந்தோறும் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர். உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது

we-r-hiring
இதில், பிரபல தமிழ் நடிகை விசித்திரா, சின்னத்திரை நடிகர்கள் வினுஷா, ரவீனா, விஷ்ணு, வெள்ளித்திரை நடிகை மாயா, யூ டியூபர் பூர்ணிமா, எழுத்தாளர் பவா செல்லதுரை உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது பல அழுத்தங்களை சந்தித்தாக அப்போதே நேரடியாக முறையிட்டார் பவா செல்லதுரை. இவர் ஒரு எழுத்தாளர். அதுமட்டும் இல்லாமல் நடிகர், இலக்கிய ஆர்வலர் அத்துடன் விவசாயியும் ஆவார். பல திரைப்படங்களில் வசனம் எழுதி உள்ளார். இவர் அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நாட்களிலேயே நிகழ்ச்சியை விட்டு தானாக வெளியேறினார். இருப்பினும் அவர் உடல்நலப் பிரச்சனை காரணமாக வௌியேற சென்றதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள பவா செல்லதுறை தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் தெரிகிறது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

MUST READ