- Advertisement -
தமிழ் ரசிகர்கள் தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல், அனைத்து மொழி படங்களையும் ரசிக்கத் தொடங்கி விட்டனர். கோலிவுட் படங்கள் மட்டுமன்றி, டோலிவுட், மோலிவுட், சாண்டல்வுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கும் வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் மோலிவுட் அதாவது மலையாள திரையுலகம் தனித்துவமான திரைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஆக்ஷன், அதிரடி என கமர்ஷியல் படங்களாக இல்லாமல் சாதாரண மனிதனின் வாழ்வை பிரதிபலிக்கும் படங்களை இயக்கி வெற்றி கண்டுவருகிறது
அதாவது பீல் குட் படங்களுக்கு மலையாள திரையுலகம் ஒரு சிறந்த உதாரணம். அந்த வகையில், மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களில் ஒருவர் ஷேன் நிகேம். இவர் கிஸ்மத் என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் பல படங்களில் நடித்தாலும், கும்பலாங்கி நைட்ஸ் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இறுதியாக ஆர்டிஎக்ஸ் படத்தில் நடித்திருந்தார்.




