
குடியரசு தினமான இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏறி, இறங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் தங்கம் விலை உயர்ந்த நிலையில், நேற்று குறைந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்று முன் தினம் சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாயும், கிராமுக்கு 05 ரூபாயும் உயர்ந்தது. இந்த நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாயும், கிராமுக்கு 05 ரூபாயும் குறைந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் 46,640 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,830க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு 80 ரூபாயும், கிராமுக்கு 10 ரூபாயும் உயர்ந்துள்ளது. அதாவது தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போல வெள்ளி விலையு இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை இன்று கிராமுக்கு 50 பைசா உயர்ந்து ரூ.78க்கும், கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து 78,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


