நடிகர் வைபவ் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் வைபவ் நடிப்பில் உருவான ஆலம்பனா திரைப்படம் உருவானது. கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் இப்படம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுவரை படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக வைபவ் நடிப்பில் உருவாகும் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் எனும் படத்தின் பூஜை தொடங்கப்பட்டு படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் வைபவ், ரணம் எனும் கிரைம் திரில்லர் பாடத்தில் நடித்துள்ளார். இயக்குனர் ஷெரிஃப் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் அரோல் கொரேல்லி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.