spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிரைவில் கட்சி தொடங்கும் விஜய்..... போட்டியாக களமிறங்குகிறாரா அஜித்?

விரைவில் கட்சி தொடங்கும் விஜய்….. போட்டியாக களமிறங்குகிறாரா அஜித்?

-

- Advertisement -

விரைவில் கட்சி தொடங்கும் விஜய்..... போட்டியாக களமிறங்குகிறாரா அஜித்?தமிழ் சினிமாவும் அரசியலும் கண்ணும் இமையும் போல் பிரிக்க முடியாதவை. எம்ஜிஆருக்கு பின் பல நடிகர்களும் கட்சி தொடங்கி முதலமைச்சராகி விட வேண்டும் என்று முயற்சித்து பார்த்தனர். அந்த வகையில் தற்போது ரசிகர்களின் அசுர பலத்துடன் இருப்பவர் நடிகர் விஜய். அவர் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாகவும் அதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. மேலும் அவருடைய மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் போட்டியிடப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு எதிராக பெரும் ரசிகர்களைக் கொண்ட யாரையாவது களத்தில் இறக்கினால் அரசியலின் போக்கை மாற்ற முடியும் என்று பாஜக புதிய திட்டத்தை தீட்டி உள்ளதாம். அதன்படி நடிகர் அஜித்தை அரசியல் வட்டத்துக்குள் கொண்டு வர வேலைகளையும் முன்னெடுத்துள்ளதாம் அக்கட்சி.விரைவில் கட்சி தொடங்கும் விஜய்..... போட்டியாக களமிறங்குகிறாரா அஜித்? பொதுவாகவே சினிமாவில் விஜய்யா? அஜித்தா? என்னும் போக்கு ரசிகர்களிடம் நிலவி வருகிறது. அஜித் பெரிதாக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை. அவர் நிச்சயம் அரசியலுக்கு வர மாட்டார் என்று கருதப்பட்டு வந்த நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்த ரங்கராஜ் பாண்டே அஜித்தை அரசியலுக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் நிச்சயம் அஜித் தமிழக அரசியலுக்குள் என்ட்ரி கொடுப்பார் என்றும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ