Homeசெய்திகள்சினிமாகொக்கி குமார் இஸ் பேக்..... 'புதுப்பேட்டை 2' குறித்து செல்வராகவனின் அதிரடி அறிவிப்பு!

கொக்கி குமார் இஸ் பேக்….. ‘புதுப்பேட்டை 2’ குறித்து செல்வராகவனின் அதிரடி அறிவிப்பு!

-

- Advertisement -

கொக்கி குமார் இஸ் பேக்..... 'புதுப்பேட்டை 2' குறித்து செல்வராகவனின் அதிரடி அறிவிப்பு!கடந்த 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் புதுப்பேட்டை. இந்தப் படத்தை பிரபல இயக்குனரும் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். புதுப்பேட்டை மாணவன் ஒருவன் வடசென்னையில் பயங்கரமான கேங்ஸ்டராக மாறும் கதை தான் இப்படம். அந்த வகையில் ரத்தம், பழிவாங்கல், வன்முறை, அரசியல் என அனைத்தும் இந்த படத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதேசமயம் இன்று வரையிலும் புதுப்பேட்டை படமானது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.கொக்கி குமார் இஸ் பேக்..... 'புதுப்பேட்டை 2' குறித்து செல்வராகவனின் அதிரடி அறிவிப்பு!

இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க இருக்கிறாராம். இது குறித்த அறிவிப்பை செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த வருடம் புதுப்பேட்டை 2 வரப்போகிறது” என்று பதிவிட்டுள்ளார். செல்வராகவன் வெளியிட்ட இந்த அறிவிப்பினால் ரசிகர்கள் பலரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். எனவே படம் சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவலும் கூடிய விரைவில் தெரிவிக்கப்படும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ