spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகை நக்மாவை திருமணம் செய்ய விரும்பும் ஜெய் பீம் மணிகண்டன்!

நடிகை நக்மாவை திருமணம் செய்ய விரும்பும் ஜெய் பீம் மணிகண்டன்!

-

- Advertisement -

நடிகை நக்மாவை திருமணம் செய்ய விரும்பும் ஜெய் பீம் மணிகண்டன்!டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் மூலம் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். அதைத் தொடர்ந்து ஹீரோவாக தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அறிமுகம் இயக்குனர் விநாயகக் சந்திரசேகர் இயக்கியிருந்த குட் நைட் படத்தில் நடித்திருந்தார் மணிகண்டன். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது லவ்வர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் மணிகண்டன். இந்த படம் (பிப்ரவரி 9) இன்று வெளியாக இருக்கிறது.நடிகை நக்மாவை திருமணம் செய்ய விரும்பும் ஜெய் பீம் மணிகண்டன்!

இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூட்யூபர் வி ஜே சித்துவின் வ்லாக்ஸ்- இல் கலந்து கொண்ட நடிகர் மணிகண்டன் கலகலப்பாக பேசியிருந்தார். மணிகண்டனை இளையதளபதி என்று ரசிகர்கள் சொல்வது போல் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. அதே சமயம் லவ்வர் படத்தில் கதை என்னவாக இருக்கும், மிமிக்கிரி செய்வது என கலகலப்பான கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதற்கு கலகலப்பாக பதில் அளித்திருந்தார் மணிகண்டன். இந்நிலையில் சின்ன வயது க்ரஷ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது மணிகண்டன், “சின்ன வயதில் இருந்தே எனக்கு நக்மாவை ரொம்ப பிடிக்கும். அவருடைய தீவிர ரசிகன் நான். என் அம்மாவிடம் கல்யாணம் செஞ்சுக்கிட்டா நக்மாவை தான் கல்யாணம் செஞ்சிக்குவேன் என்று கூறி இருக்கிறேன்” என்று பதிலளித்திருந்தார். இது சம்பந்தமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.நக்மா

we-r-hiring

நடிகை நக்மா ரஜினி, கார்த்தி, கமல், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதே சமயம் 48 வயது நிரம்பிய நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ