spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்"பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப் போவது யார்?"- தொடர்ந்து இழுபறி!

“பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப் போவது யார்?”- தொடர்ந்து இழுபறி!

-

- Advertisement -

 

"பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப் போவது யார்?"- தொடர்ந்து இழுபறி!

we-r-hiring

பாகிஸ்தானில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

உடல் எடை அதிகரிக்க நேந்திரம் காய் கஞ்சி!

பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பிடிஐ கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் மொத்தம் உள்ள 266 இடங்களுக்கு சுமார் 200 இடங்களுக்கான தேர்தல் முடிவுகளை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இம்ரானின் பிடிஐ ஆதரவு சுயேச்சை வேட்பாளர்கள் 70 இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றனர். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 60 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 336 இடங்கள் இருக்கும் நிலையில், 266 இடங்கள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றன.

கூந்தலில் எண்ணெய் பசை நீங்க இதை பண்ணுங்க!

வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப எஞ்சிய 70 இடங்கள் பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே பாகிஸ்தானில் ஆட்சியை அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ