கூந்தல் பிரச்சனைக்கு தற்போது பாட்டி சொன்ன வைத்தியங்களை பார்ப்போம்.
முதலில் இரண்டு தக்காளியை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து சிகைக்காய் போட்டு தேய்த்து குளிக்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை பின்பற்றினால் தலை முடி பளபளப்பாக இருக்கும்.
1/4 காபி டிக்காசனை எடுத்து அதனை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அது ஆறியவுடன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் நீரால் அலச வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை பின்பற்றினால் கரும் பிரவுன் நிறமாக கூந்தல் ஜொலிக்கும்.
தலை முடிக்கு பளபளப்பு கிடைக்க முட்டையின் வெண் கருவை தலையில் தேதி 20 நிமிடங்கள் கழித்து சிகைக்காய் போட்டு குளிக்க வேண்டும்.
அதே சமயம் கூந்தலில் உள்ள எண்ணெய் பசை நீங்க கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து அதனை தலையில் தடவி குளித்து வர எண்ணெய் பசை நீங்கி தலைமுடி பளபளப்பாக இருக்கும்.
இருப்பினும் இம்முறையை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.