- Advertisement -
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள ஏழு கடல் ஏழு மலை படத்தின் முதல் பாடல் வரும் பிப்.14ம் தேதி வெளியாகிறது
தமிழ் திரையுலகில் ராமின் திரைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராம், இதைத் தொடர்ந்து, தங்க மீன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். தரமணி, பேரன்பு ஆகியவை ராம் இயக்கிய திரைப்படங்கள். இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. அடுத்ததாக ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. இதில் பிரபல மலையாள நடிகர் நிவின்பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
