spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதீவிர கராத்தே பயிற்சியில் ஃபகத் ஃபாசில்... புகைப்படங்கள் வைரல்....

தீவிர கராத்தே பயிற்சியில் ஃபகத் ஃபாசில்… புகைப்படங்கள் வைரல்….

-

- Advertisement -
கராத்தே சந்திரன் திரைப்படத்திற்காக நடிகர் ஃபகத் ஃபாசில், தற்போது தீவிர கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மலையாள திரையுலகில் அறிமுகாகி மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்த ஃபகத் ஃபாசில் தற்போது, தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நாயகனா உயர்ந்திருக்கிறார். அதிரடியான, ஆக்ரோஷமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஃபகத் ஃபாசில். கதாநாயகனாக நடித்திருந்தாலும் சரி வில்லனாக நடித்திருந்தாலும் சரி எந்த படம் என்றாலும் அதில் ஃபகத்தின் நடிப்பு பாராட்டப்படும். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

we-r-hiring
இந்த படத்தில் ரத்தினவேல் என்ற கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதில் பகத் பாஸில் சாதி வெறி கொண்ட வில்லனாக நடித்திருந்தாலும் இவரின் அசாத்தியமான நடிப்பு ரசிகர்கள் இவரை கொண்டாடும் வகையில் அமைந்தது. மேலும், தெலுங்கில் புஷ்பா முதல் பாகத்தில் நடித்த ஃபகத், தற்போது இரண்டாம் பாகத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இது தவிர, ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்திலும் ஃபகத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், மலையாளத்தில் இயக்குநர் ஜித்து மாதவன், அடுத்ததாக இயக்கி உள்ள ஆவேஷம் படத்திலும் அவர் நடித்திருக்கிறார். தற்போது, அறிமுக இயக்குநர் ராம் இயக்கத்தில் கராத்தே சந்திரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்காக நடிகர் ஃபகத் தீவிர கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

MUST READ