Homeசெய்திகள்சினிமாஓடிடி தளத்தில் வெளியானது ஷாருக்கானின் டன்கி

ஓடிடி தளத்தில் வெளியானது ஷாருக்கானின் டன்கி

-

- Advertisement -
ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளுக்கு வந்த டன்கி திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியானது.

கடந்த ஆண்டு ஷாருக்கானுக்கு ஹாட்ரிக் ஆண்டு என்று சொல்லாம். ஆண்டின் தொடக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் வெளியானது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் இத்திரைப்படம் வௌியானது. சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் இத்திரைப்படம் வசூலித்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படம் வெளியானது. நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம், ஆயிரத்து 200 கோடிக்கு மேல் வசூலித்தது.

இரண்டு வெற்றிக்கு பிறகு மீண்டும் ஷாருக்கான் நடிப்பில் ஆண்டின் இறுதியில் வெளியான திரைப்படம் தான் டன்கி. ராஜ்குமார் ஹிரானி இப்படத்தை இயக்கி இருந்தார். இதில் டாப்ஸி, விக்கி கௌசல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் இந்தி மொழியில் மட்டும் வெளியானது. இத்திரைப்படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. பதான், ஜவான் படங்களை ஒப்பிடுகையில் டன்கி திரைப்படம் வசூலில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் டன்கி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டன்கி திரைப்படம் வெளியாகி உள்ளது.

MUST READ