- Advertisement -
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ரிபெல் படத்திலிருந்து புதிய பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
கோலிவுட்டின் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். பல ஹிட் பாடல்களை கொடுத்து வரும் ஜிவி பிரகாஷ் இசை மட்டுமன்றி, மறுபக்கம் நடிப்பிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். பல தரப்பட்ட படங்களை தேர்வு செய்து நாயகனாக ஜிவி நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகி வரும் டியர் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. சமீபத்தில் இவரின் அடியே திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ரிபெல்.
