திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு தடபுடலான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் செயற்குழு கூட்டமானது திருவள்ளூர் அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட பாஜக தலைவர் அஸ்வின்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநில தொழில் பிரிவு தலைவர் கோவர்தனன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு ஆட்டு எலும்பு ரசம், சிக்கன் வறுவல், சிக்கன் குழம்பு, மீன் வருவல், மீன் குழம்பு, ஆம்லெட்,சாம்பார், ரசம், கூட்டு என பல வகையான அசைவ உணவு வகைகள் தடபடலாக உணவுகள் பரிமாறப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் உள்ளடக்கிய பாஜக அசைவ விருந்தை தவிர்த்து பெரும்பாலும் சைவ விருந்து கடைப்பிடித்து வருகின்ற நிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவருக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது பாஜக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
