Homeசெய்திகள்இந்தியாபுதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் காந்திய உறுதிமொழி எடுக்கப்பட்டது

புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் காந்திய உறுதிமொழி எடுக்கப்பட்டது

-

- Advertisement -

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 76 வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேசிய மாணவர் படையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி காந்திய உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

மேலும் காந்தி பூங்காவில் உள்ள வர்த்தகரீதியில் உள்ள கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என புதுக்கோட்டை நகராட்சிக்கு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

we-r-hiring

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 76 வது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள காந்தி சிலைக்கு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை சார்பில் கல்லூரி மாணவர்கள் தேசிய மாணவர் படையினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும் ஜாதி வகுப்புவாதம் உள்ளிட்ட எந்த ஒரு மக்கள் ஒற்றுமையை பிளவுபடுத்தும் கொள்கையை எதிர்த்து போராடுவோம், ஜாதி, மதம் இனம் மற்றும் பல வேற்றுமையை கடந்து மனித சமுதாயம் என்ற ஒற்றை நோக்கோடு செயல்படுவோம், எந்த ஒரு சூழ்நிலையிலும் வன்முறையில் ஈடுபடுவதையும் அல்லது சகிப்புத்தன்மை அற்ற வகையில் செயல்பட அனுமதிக்க மாட்டோம், சமுதாயத்தில் நடக்கும் அனைத்து விதமான பிரச்சனைக்கும் மது தான் முக்கிய காரணமாக உள்ளது அதனால் மதுவை ஒழிக்க பாடுபடுவோம் என்று கூறி காந்திய உறுதிமொழிகளை ஏற்றுக்கொண்டனர்.

மேலும் காந்தி பூங்காவில் வர்த்தக ரீதியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நல பேரவையின் நகராட்சிக்கு கோரிக்கை .

MUST READ