spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகவுன்சிலர்களுக்கு மாத ஊதியம்- சென்னை மேயர் பிரியா

கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம்- சென்னை மேயர் பிரியா

-

- Advertisement -

கவுன்சிலர்களுக்கு ஊதியம் என்ற நல்ல செய்தி விரைவில் வரும் என சென்னை மேயர் அறிவித்துள்ளார்.

chennai mayor priya press meet
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய மதிமுக கவுன்சிலர் ஜீவன், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு எனும் பெயரை உச்சரிக்க மறுத்தும், பெரியார் அம்பேத்கர் காமராஜர் அண்ணா கலைஞர் பெயரையும் சட்டபேரவையில் சொல்ல மறுத்த ஆளுநரை கண்டித்து சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், ஆளுநர் அவையில் இருந்த போதே சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் கொண்டு வந்த முதலமைச்சருக்கு பாராட்டுக்கள், தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்ந்து நிருபித்துவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் என தெரிவித்த ஜீவன், தமிழ் நாட்டை சீண்டிப்பார்க்கவே பயம் வர சூழலை கொண்டு வர வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாமன்றக் கூட்டம் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

we-r-hiring

இதுகுறித்து பதிலளித்த மேயர் பிரியா, அடுத்த மாமன்றக் கூட்டம் முதல் மாமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும் என அறிவித்தார். மேலும், சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு, ஆளுநருக்கு எதிராக மாநகராட்சி மாமன்றகூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் மேயர் பிரியா தகவல் தெரிவித்தார். கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்துவருவதாகவும், விரைவில் நல்ல செய்திவரும் என்றும் மேயர் பிரியா தெரிவித்தார்.

MUST READ