Homeசெய்திகள்சென்னைதமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே - ஆர்.டி.சேகர்

தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்

-

- Advertisement -

திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன் சின்னம் மட்டும்தான் உதிக்கும். பெரம்பூர் தொகுதியில் விஜய், அனைத்து வேட்பாளர்களை போலவே ஒரு வேட்பாளர்தான்; தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே  என பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் கூறியுள்ளாா்.

தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே - ஆர்.டி.சேகர்

we-r-hiring

2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர் போட்டியிட உள்ளார். இதற்கான வேட்புமனுவை ஆர்.டி.சேகர் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில் பெரம்பூர் தொகுதியில் இன்று பிரசாரத்தை தொடங்கினார்.

பெரம்பூர் தொகுதிகுட்பட்ட துளசிங்கம் தெரு பகுதியில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோயிலில் இருந்து வீடு வீடாக தனது பிரசாரத்தை தொடங்கிய அத்தொகுதியின் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தமிழ்நாடு அரசின் சாதனைகள் பட்டியலிடப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் அளித்து வாக்கு சேகரித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.டி.சேகர், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக சார்பாக மூன்றாவது முறையாக போட்டியிட உள்ளேன். கடந்தகால தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கணேசபுரம் மேம்பாலம் பணிகள் விரைவில் முடிய உள்ளது. கொடுங்கையூர் குப்பை கிடங்கு பயோ மைனிங் முறை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இஸ்லாமியர், கிறிஸ்தவர்களின் வழிபாட்டுக்காக தலா 3 ஏக்கர் நிலங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 3 கால்வாய்கள் வெள்ளதடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன் சின்னம் மட்டும்தான் உதிக்கும். பெரம்பூர் தொகுதியில் விஜய் அனைத்து வேட்பாளர்களை போலவே விஜய்யும் ஒரு வேட்பாளர்தான். தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே என்றார்.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் உதயநிதி ஸ்டாலின்

MUST READ