பெரம்பூா் தொகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். அதில் மனைவி, மகன், மகள் மீது சொத்துக்களே விஜய் வாங்கவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தவெக தலைவர் விஜய் பெரம்பூா் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தாா். விஜய்யிடம் ரூ.620 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விஜய்க்கு ரூ.404.58 கோடிக்கு அசையும் சொத்துகள் உள்ளன. சாலிகிராம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் ரூ.213.36 கோடியை சேமிப்புக் கணக்கில் வைத்துள்ளார். இந்திரா நகர் ஆக்சிஸ் வங்கி கிளையில் ரூ.5.79 கோடியை நிலையான வைப்பு தொகையாக வைத்துள்ளார்.

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கோடம்பாக்கம் கிளையில் ரூ.24 கோடியை சேமிப்புத் தொகையாக விஜய் வைத்துள்ளாா். ஹெச்.டி.எஃப்.சி பெசன்ட் நகா் கிளையில் ரூ.20 கோடியை நிலையான வைப்புத் தொகையாக வைத்துள்ளாா். சாஸ்திாி நகா் ஸ்டேட் வங்கி கிளையில் ரூ.15 கோடியை நிலையான வைப்புத் தொகையாக வைத்துள்ளாா். விஜய் மனைவி பெயரில் வருமானமும், காரும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளாா்.
அதுமட்டுமல்லாமல், பட்டப் படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும், லயோலா கல்லூாியில் பி.எஸ்.சி படிப்பை முடிக்காமல் பாதியில் கைவிட்டுள்ளாா் எனவும் வேட்புமனுவில் விஜய் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலகட்டமான 2020-21 ரூ.8.04 கோடி வருமானம் என வருமான வாித்துறையில் விஜய் கணக்கு சமா்ப்பித்துள்ளதாகவும் வேட்புமனுவில் விஜய் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சொத்துக்களையும் தனது பெயாிலேயே வாங்கி குவித்துள்ளாா் தவெக தலைவா் விஜய். கடந்த 25 ஆண்டுகளாக மனைவி, மகன், மகள் மீது எந்த சொத்துக்களையும் விஜய் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் வருகையின் போது அராஜகத்தில் ஈடுபட்ட தவெகவினர்… 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு!!
