நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் கே இ ஞானவேல் ராஜா தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைத்துள்ளார்.
இப்படம் 3D தொழில்நுட்பத்தில் மிகப் பிரம்மாண்டமாக வரலாற்று சரித்திர படமாக உருவாகியுள்ளது. அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தில் வி எஃப் எக்ஸ் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, திஷா பதானி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் டப்பிங் பணிகளும் நிறைவடைந்தது. இந்நிலையில் திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது இதன் தாமதத்திற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே சூர்யாவிற்கு கங்குவா படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேசமயம் படத்தினை எடிட்டிங் செய்தவரை பார்த்த சூர்யா, இயக்குனர் சிறுத்தை சிவாவை பாராட்டியுள்ளாராம். இருப்பினும் படத்தின் சில காட்சிகளில் வி எஃப் எக்ஸ் பணிகள் நம்பத் தகுந்த அளவில் இல்லாத காரணத்தால் அந்த காட்சிகளுக்கு மீண்டும் வி எஃப் எக்ஸ் பணிகள் செய்யுமாறு கூறிவிட்டாராம். இதனால்தான் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இப்பணிகளை முழுவதும் முடித்துவிட்டு படக்குழுவினர் விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -


