Homeசெய்திகள்இந்தியாசென்னையில் ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு

சென்னையில் ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு

-

- Advertisement -

சென்னையில் ஜி 20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறுவதை ஒட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ஜி20 கல்வி செயற்குழு மாநாடு இன்று(31.01.2023) தொடங்கி வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வரை சென்னை மற்றும் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது.

we-r-hiring

இந்த ஜி20 மாநாட்டில் 29 பிரதிநிதிகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல், தாஜ் கன்னிமாரா, ஹயாத், தாஜ் கிளப் ஹவுஸ் ஆகிய இடங்களில் தங்குவதுடன், ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.

மேலும் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று மகாபலிபுரத்தில் உள்ள யுனெஸ்கோ ஹெரிடேஜ்ஜில் நடைபெறும் நிகழ்விலும் அனைத்து பிரதி நிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆகையால் இன்று முதல் 2ஆம் தேதி வரை பிரதிநிதிகள் தங்கும் இடங்கள், விழா நடைபெறும் இடங்கள் மற்றும் பிரமுகர்கள் பயணம் செய்யும் வழித்தடங்கள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பகுதிகளில் உள்ள வழித்தடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதிநிதிகள் தங்கும் இடங்களான தாஜ் கன்னிமாரா, தாஜ் கோரமண்டல், தாஜ் கிளப் ஹவுஸ், மற்றும் ஹயாட் ஏஜென்சி மற்றும் விழா நடைபெறும் இடங்களில் 15 உதவி ஆணையர்கள், 43 இன்ஸ்பெக்டர்கள், 152 உதவி ஆய்வாளர்கள் உட்பட 1196 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் பிரமுகர்கள் பயணம் செய்யும் இடங்கள், விழா நடைபெறும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படமாலிருக்க 295 போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருவதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

MUST READ