- Advertisement -
விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சூரி. இதையடுத்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சூரியின் திரைப்பயணத்தின் ஆரம்பகாலத்தில் பெரும்பாலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் நடித்திருப்பார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், மான் கராத்தே என அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நடித்த படங்கள் ஏராளம்.

அண்மையில் விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து சூரி அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது சூரி நடித்திருக்கும் திரைப்படம் கொட்டுக்காளி. மலையாள நட்சத்திரம் அன்னா பென் நாயகியாக நடித்துள்ளார். வினோத் ராஜ் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதைத் தொடர்ந்து, அவர், சசிகுமார், உன்னி முகுந்தனுடன் இணைந்து கருடன் என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.


