spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது - ஈபிஎஸ்

விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது – ஈபிஎஸ்

-

- Advertisement -

"இன்னும் பல அமைச்சர்களுக்கு தண்டனை கிடைக்கும்"- எடப்பாடி பழனிசாமி பேச்சு!

விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டதாக அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளிட்டுள்ள சமூக வலைதள பதிவில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 110 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹசீஸ் என்ற போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த விடியா ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றுவிட்டது. அஇஅதிமுக ஆட்சியில் தனக்கு தும்மல் வந்தாலும் நான் பதவி விலக வேண்டும் என்று சொன்ன இன்றைய முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு தார்மீக பொறுப்பேற்று இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்?

"பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை"- அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

அஇஅதிமுக ஆட்சியில் தொடர்ந்து குரல் கொடுத்து, அரசின் கவனத்திற்கு பல்வேறு விஷயங்களைக் கொண்டு வந்த சமூகப் பொறுப்பாளர்கள் பலர், தற்போது திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள இந்த போதைப்பொருள் விவகாரத்தில் மவுனமாக இருப்பது ஏன்? தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு காவல்துறை, கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் விடியா முதல்வரைப் போலன்றி, துரிதமாக நடவடிக்கை எடுத்து போதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ