spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமெலோடி குயின் ஸ்ரேயா கோஷல் பிறந்தநாள்... ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து...

மெலோடி குயின் ஸ்ரேயா கோஷல் பிறந்தநாள்… ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து…

-

- Advertisement -
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்திந்திய மொழிகளையும் தனது இனிமையான குரலால் பாடல்களாக வெளிப்படுத்திய பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

இந்திய திரையுலகில் கடந்த 23 ஆண்டுகளாக தன் குரலுக்கென தனி இடத்தையும், தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துக் கொண்டிருப்பவர் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல். அங்காடித் தெரு திரைப்படத்தில் இடம்பெற்ற உன் பேரைச் சொல்லும் போதே என்ற பாடலை இன்று வரை யாராலும் மறந்திருக்க முடியாது. நா.முத்துக்குமாரின் வார்த்தைகளால் வெளியான இந்த பாடலுக்கு உயிர் கொடுத்த மற்றொருவர் ஸ்ரேயா கோஷல். இப்பாடலை ஸ்ரேயா பாடியிருப்பார்.

we-r-hiring
சிறுவயதில் முறைப்படி இசை கற்றுக்கொண்ட ஸ்ரேயா, தனது 16 வயதில் தனியார் தொலைக்காட்சியில் சரிகமப என்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடினார். இதைப் பார்த்த பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலி, தான் இயக்கி தேவதாஸ் படத்தில் பாட வைத்தார். ஷாருக்கான் படத்தில் முதல் முதலாக பாடிய ஸ்ரேயாவின் குரல் படத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒலிக்கத் தொடங்கியது. அவரது குரலில் தமிழில் வெளியான முதல் பாடல் செல்லமே செல்லம் என்ற பாடலாகும். முதல் பாடலிலேயே ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துவிட்டார் ஸ்ரேயா. தெலுங்கில் 2003-ல் முதல் முதலாக பாடினார்.

தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, இமான் மற்றும் அனிருத் என அனைத்து முன்னணி இசை அமைப்பாளர்களுடனும் இவர் பணியாற்றி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி, ஒரிசா, பெங்காலி, துளு, போஜ்புரி சிங்களம், மற்றும் பாகிஸ்தானிய மொழியிலும் இவர் பல பாடல்களை பாடி இருக்கிறார். திரைப்படம் மட்டுமன்றி தனி இசை ஆல்பங்களிலும் அவர் பாடியிருக்கிறார். இதுவரை 5 தேசிய விருதுகளையும், பல பிலிம் பேர் விருதுகளையும் வென்றிருக்கிறார்.

பாடல்கள் மட்டுமன்றி மாடலிங் துறையிலும் ஆர்வம் கொண்டவர் பாடகி ஸ்ரேயா கோஷல். இதனால், மாடலிங் துறையிலும் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இசை நிகழ்ச்சிகளுக்கு அணிந்து வரும் உடைகளில் பெரும்பாலும் அவரே வடிவமைத்தது என்று தெரிகிறது. இந்நிலையில், ஸ்ரேயா கோஷல் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்களும், ரசிககர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ