spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகவனம் ஈர்க்கும் 'வெப்பம் குளிர் மழை' படத்தின் டிரைலர்!

கவனம் ஈர்க்கும் ‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் டிரைலர்!

-

- Advertisement -

வெப்பம் குளிர் மழை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் பஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் வெப்பம் குளிர் மழை. கவனம் ஈர்க்கும் வெப்பம் குளிர் மழை படத்தின் டிரைலர்!இந்த படத்தில் திரவ், இஸ்மத் பானு, எம் எஸ் பாஸ்கர், ரமா மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஃப்டிஎஃப்எஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சங்கர் ரங்கராஜனின் இசையிலும் பிரித்வி ராஜேந்திரனின் ஒளிப்பதிவிலும் இந்த படம் தயாராகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இது எந்த மாதிரியான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை தூண்டியது. அதைத்தொடர்ந்து இப்படம் மார்ச் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இப்படம் கிராமத்து பின்னணியில் குழந்தையின்மை பிரச்சனையை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

we-r-hiring

மேலும் கணவன், மனைவி இருவரும் இந்த சமூகத்தில் குழந்தையின்மை பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார்கள் என்றும் குழந்தை பிறந்த பின்பும் அவர்களுக்கிடையே சொல்லக்கூடாத பிரச்சனை உருவாகியுள்ளது என்பதையும் எடுத்துக் கூறுகிறது இந்த ட்ரெய்லர். இது தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வைரலாகி வருகிறது.

MUST READ