spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஷால் நடிக்கும் ரத்னம்... மிரட்டலான டிரைலர் ரிலீஸ்...

விஷால் நடிக்கும் ரத்னம்… மிரட்டலான டிரைலர் ரிலீஸ்…

-

- Advertisement -
விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ரத்னம் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வௌியாகி உள்ளது.

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி நாயகன் விஷால். காதல், காமெடி, ஆக்‌ஷன், அதிரடி என அனைத்து விதமான கதைக்களத்திலும் நடித்து உச்ச நடிகராக வலம் வருகிறார். செல்லமே படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகிற்கு அறிமுகமான அவர், சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். செல்லமே படத்தின் வெற்றிக்கு பிறகு விஷால் நடித்த சண்டக்கோழி திரைப்படம் அவரை ஆக்ஷன் நாயகனாக முன்னிறுத்தியது. விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

we-r-hiring
தற்போது விஷால் ஹரி இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு ரத்னம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். மேலும், கௌதம் மேனன், சமுத்திரக்கனி, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று, படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருக்கிறார்.

இந்நிலையில், ரத்னம் படத்தின் முன்னோட்டத்தை படக்குழு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிரெண்டாகி வருகிறது.

MUST READ