கவின் நடிக்கும் ஸ்டார் பட ட்ரைலர்… வெளியானது மாஸ் அப்டேட்…
- Advertisement -
கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்டார் திரைப்படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது.

லிப்ட், மற்றும் டாடா படங்களின் வெற்றி கவினுக்கு வெள்ளித்திரையில் படிக்கட்டுகளாய் மாறி இருக்கிறது. அவரது டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் தாமதமாக வெளியானாலும், வசூலிலும் வேட்டையாடியது. இதனால், கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி இருக்கின்றன. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளளின் ஸ்டார் திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. ஸ்டார் படம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வௌியாகும் என கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து படம் தாமதமானது.

இந்நிலையில், ஸ்டார் திரைப்படம் வரும் மே மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்டார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், பின்னணி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே, படத்தின் டீசர் மற்றும் பாடல்களும் வௌியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ஸ்டார் படத்தைத் தொடர்ந்து, ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் நடன இயக்குநர் சதீஸ் இயக்கும் புதிய படத்தில் கவின் நடிக்கிறார். இப்படத்திற்கு கிஸ் என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஸ்டார் திரைப்படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, நாளை காலை 11.11 மணிக்கு ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.