சென்னையை அடுத்த வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்டசாலை வரதராஜபுரம் அருகே சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் பின்னால் லோடு வேன் மோதியதில் வேனில் சிக்கிய ஓட்டுனரை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் பல மணி நேரம் போராட்டத்திற்க்கு பிறகு மீட்டனர்.


சென்னை வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக இன்று மாலை எண்ணூரில் இருந்து கடைகளுக்கு விற்பனைக்காக சிலிண்டர்களை ஏற்றி கொண்டு வண்டலுர் செல்வதற்காக லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது வரதராஜபுரம் அருகே திடிரென மாடு குறுக்கே வந்ததால் லாரி ஓட்டுனர் பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத லோடு வேன், ஓட்டுனர் கட்டுபாட்டை இழந்து லாரியின் பின்புறம் மோதியதில் வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தை ஏற்பட்டதை அறியாத லாரி ஓட்டுனர் 200 மீட்டர் வரை வேனை இழுத்து சென்றுள்ளார்.
இதனை கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் அதிர்ச்சியடைந்து லாரி ஓட்டுனரிடம் பின்னால் வேன் சிக்கி இருப்பதை தெரிவித்ததை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் வேனில் சிக்கிய ஓட்டுனரை வெகு நேரம் போராடி மீட்டனர்.
லாரியில் கொண்டு வரபட்ட சிலிண்டர்கள் முழுவதுமாக எரிவாயு நிறப்பபட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. இதில் வேன் ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


