- Advertisement -
சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டி இந்திய திரையுலகில் மெகா ஹிட் கொடுத்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் நாளை மறுநாள் மே10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவானது இத்திரைப்படம். படத்தில், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நாயகர்களாக நடித்திருந்தனர். மேலும், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்டோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார்.


இத்திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்ததோடு, ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதும் வென்று உலக சாதனை படைத்தது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டிக்குவித்தது. இத்திரைப்படம் தெலுங்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது.



