spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் கூட்டணி... தமிழ் பட டைட்டிலால் எழுந்த புதிய சிக்கல்...

பிரசாந்த் நீல் – ஜூனியர் என்டிஆர் கூட்டணி… தமிழ் பட டைட்டிலால் எழுந்த புதிய சிக்கல்…

-

- Advertisement -
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்திற்கு வைக்கப்படவுள்ள தலைப்பால், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு வெளியான கன்னட படமான உக்ரம் திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் பிரசாந்த் நீல். இதைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் முதலில் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. எதிர்பாராமல் இப்படத்திற்கு கிடைத்த வெற்றி, இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.

we-r-hiring
இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கிய திரைப்படம் சலார். இப்படத்தில் பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து சலார் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். அதே சமயம், ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 31-வது படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. தேவரா படத்திற்கு பிறகு இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு டிராகன் என்று தலைப்பு வைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்திற்கு டிராகன் என்று தலைப்பு வைக்கப்பட்டு போஸ்டரும் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், பான் இந்தியா படமாக உருவாக உள்ள ஜூனியர் என்டிஆரின் படத்திற்கும் டிராகன் என தலைப்பு வைப்படுவதால் தமிழ் மொழி வெளியீட்டில் சிக்கல் ஏற்படலாம் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ