spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுற்றங்களுக்கு வட மாநிலத்தவரே காரணம் - டிடிவி பகிரங்கக் குற்றச்சாட்டு

குற்றங்களுக்கு வட மாநிலத்தவரே காரணம் – டிடிவி பகிரங்கக் குற்றச்சாட்டு

-

- Advertisement -

  வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்குமாறு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “தமிழக வடமாநில தொழிலாளர்களின் அத்துமீறிய செயல்கள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது. பல்வேறு தொழில்களில் வடமாநிலத்தவர் உள்ளிட்ட பிற மாநில தொழிலாளர்களை நியமிப்பது அதிகரிப்பதால் தமிழக இளைஞர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன. மேலும், அவர்களால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. பிற மாநில தொழிலாளர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிமாநில தொழிலாளர்கள் - Other State Employees

we-r-hiring

எனவே, இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்கவும், தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழக அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ