- Advertisement -
‘நீலதாமரா’ என்ற திரைப்படத்தின் மூலம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். தமிழில் ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் களமிறங்கினார். அதன்பிறகு ‘சிந்து சமவெளி’ படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் தான் மைனா. பிரபு சாலமன் இப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் அமலாபாலுக்கு தமிழில் புதிய பாதையை போட்டுத் தந்தது.

மைனா படத்தின் வெற்றி அமலா பாலுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வர முக்கிய காரணமாக அமைந்தது. தொடர்ந்து விஜய், தனுஷ், அதர்வா, சூர்யா, ஜெயம் ரவி, விஷ்ணு விஷால் என கோலிவுட்டின் அனைத்து சூப்பர் ஹீரோக்களுடன் கூட்டணி அமைத்து நடித்தார். அனைத்து படங்களும் ஹிட் அடித்தன. தமிழில் முன்னணி நடிகையாக உருவெடுத்த நடிகை அமலா பால், அடுத்து தெலுங்கு பக்கம் திரும்பினார். டோலிவுட்டிலும் அவர் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.




