spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்மனைவியின் நடத்தையில் சந்தேகம்- கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது

மனைவியின் நடத்தையில் சந்தேகம்- கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது

-

- Advertisement -

கடலூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கணவன், மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

murder

we-r-hiring

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பகுதிக்கு உட்பட்ட கீழக்கரை (கோப்பாடி) கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் தமிழ்ச்செல்வன். இவர் கேரளாவில் ஆயுர்வேத மருந்து கடையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 21 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி இன்பவள்ளி. இவர்களுக்கு தனுஸ்வரன் (20). இன்பராஜ் (17) இரு மகன்கள் இலக்கியா (19)என்ற மகளும் உள்ளனர்.

தமிழ்ச்செல்வன் கடந்த மாதம் 23ஆம் தேதி கேரளாவில் இருந்து வீடு திரும்பி உள்ளார். தமிழ்ச்செல்வன் வெளியூரில் இருப்பதால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது ஆத்திரத்தில் கணவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்ததாக தெரிகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார், ரத்த வெள்ளத்தில் இன்பவள்ளி கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். போலீஸ் விசாரணையில் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது மனைவி இன்பவள்ளி இருவருக்கும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. இன்று இருவரும் குடித்துவிட்டு பேசிக் கொண்டிருக்கும்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன் தன் கையில் வைத்திருந்த சூரி கத்தியால் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளார் என முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. மேலும் தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ