spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

-

- Advertisement -

Rain

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

we-r-hiring

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 14.06.2024 மற்றும் 15.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16.06.2024 மற்றும் 17.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

18.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழைக்கு வாய்ப்பு

19.06.2024 மற்றும் 20.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ