நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் (நேற்று) ஜூன் 14 அன்று மகாராஜா எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதற்கிடையில் விஜய் சேதுபதி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருந்த நிலையில் படமானது ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜாவின் இசை வழக்கம்போல் அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.


முதல் பாகத்தில் வெற்றியை விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது உருவாக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் படமானது 2024 தீபாவளி முன்னிட்டு வெளியாகும் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி தவிர மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் போன்றவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதி, வெற்றிமாறனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதாவது சமீபத்தில் நடந்த பேட்டியில் விஜய் சேதுபதி, “விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியர்க்கும் இடையில் அழகான காதல் கதை இருக்கிறது. அந்த காட்சிகளை எடிட் பண்ண வேண்டாம் என்று வெற்றிமாறனிடம் கேட்டுக் கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
