சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ பணிகளால் நில அதிர்வு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என மெட்ரோ தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.


சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் சென்னையின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், சென்னை அண்ணா சாலையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு சென்னை மெட்ரோவின் பணிகள் காரணமா? என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை மெட்ரோ அதிகாரி லிவிங்ஸ்டனிடம் தொலைபேசி வாயிலாக கேட்டபோது, சென்னையில் இரண்டாம் கட்ட பணிகளில் சுரங்கம் தூண்டும் பணி என்பது மாதவரத்தில் மட்டுமே நடைபெறுவதாகவும் அண்ணா சாலையில் எவ்வித சுரங்கம் தோன்டும் பணிகளும் நடைபெறவில்லை மெட்ரோ பணிகளால் அங்கு நில அதிர்விற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மாதவரத்தில் நடைபெற்று வரும் சுரங்கம் தோண்டும் பணியின் போதும்கூட, மெட்ரோ கண்காணிப்பு குழு 100 மீட்டர் தொலைவுகளில் நில அதிர்வுகள் ஏற்படுகிறதா என்பது குறித்து நவீன கருவிகள் மூலம் தொடர்ந்து 24 மணிநேரமும் கண்காணித்து வருவதாகவும், தற்போது வரை மாதவரத்தில் நடைபெற்று வரும் பகுதிகளில் அது போன்று எந்தவித நில அதிர்வுகளையும் கண்டறியவில்லை எனவும் தெரிவித்தார்.
இறுதியாக மெட்ரோ பணியாள் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்காது என தெரிவித்தார்.
