spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபு தேவா நடிக்கும் மூன்வாக்... வெளியானது முதல் தோற்றம்...

பிரபு தேவா நடிக்கும் மூன்வாக்… வெளியானது முதல் தோற்றம்…

-

- Advertisement -
இந்தியன் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் பிரபுதேவா. இவர் நடிப்பு மட்டுமன்றி இயக்கம், நடன இயக்கம், தயாரிப்பு என பற்பல துறைகளில் கலக்கி வருகிறார். சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக மாறி இருக்கிறார். காதல், லவ் பர்ட்ஸ், மின்சார கனவு, காதலா காதலா உள்பட பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
இது தவிர விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு, ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். மேலும், ஜெயம் ரவியை வைத்து எங்கேயும் காதல் என்ற ஹிட் படத்தையும் கொடுத்தவர் பிரபுதேவா. இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தி கோட் திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தவிர, அவரது நடிப்பில் பேட்ட ரேப், ஜாலியோ ஜிம்கானா ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன

இந்நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. 6-வது முறையாக இவர்கள் மீண்டும் இணையும் இத்திரைப்படத்திற்கு மூன் வாக் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்குகிறார். இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, அஜூ வர்கீஸ், அர்ஜூன் அசோகன், சிங்கம் புலி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

MUST READ