Homeசெய்திகள்இந்தியாதிருமண வீட்டில் நடந்த சோகம்! - ஹைதராபாத்

திருமண வீட்டில் நடந்த சோகம்! – ஹைதராபாத்

-

- Advertisement -

திருமணத்தில் மனமக்களுக்கு மஞ்சள் பூசும் நிகழ்ச்சியில் மணமகனுக்கு சிரித்து கொண்டே மஞ்சள் பூசி கொண்டிருந்த உறவினர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத் குல்சார் ஹவுஸில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வருபவர் முகமது ரபானி. இவர் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கே நடைபெற்ற நலங்கு வைக்கும் (மஞ்சள் பூசும்) நிகழ்ச்சியில் மாப்பிள்ளைக்கு மஞ்சள் பூசுவதற்காக முகமது ரபானி சிரித்து கொண்டே கீழே குணிந்தார்.

we-r-hiring

மஞ்சள் பூசிக்கொண்டிருந்தபோது முகமது ரபாணி திடீரென தரையில் சரிந்து விழுந்தார். அவரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் அவர் உயிர் பிழைக்கவில்லை. இச்சம்பவத்தால் திருமண வீடு துக்க வீடாக மாறி எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

MUST READ