Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிகரிக்கும் தினக்கூலி தற்கொலை - தீர்வு தான் என்ன?

அதிகரிக்கும் தினக்கூலி தற்கொலை – தீர்வு தான் என்ன?

-

- Advertisement -

தற்போது இந்தியாவில் நடக்கும் தற்கொலைகளில், தினக்கூலிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 2017ம் ஆண்டு வரை 5624-ஆக இருந்த தற்கொலைகள் இன்று 7673 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் இது பற்றி தமிழகரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

தினக்கூலி செய்பவர்களுக்கு சம்பளம் இதுதான் என்று நிர்ணைக்க படாததால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்டு, அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவதற்கு கூட கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. தினக்கூலிகளுக்கு கடன் சுமையும் அதிகமாகி அதனால் தற்கொலைகள் செய்து கொள்வதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து தொழிலர்கள் நலத்துறை சித்ரா கூறியது, “குறைந்த பட்ச ஊதிய சட்டம்” அதில் தினக்கூலிக்களை இணைப்பது குறித்து மாவட்டந்தோறும் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம் மற்றும் அவர்களுக்கான பிரச்சனைகளையும் ஆய்வு மேற்கொண்டு இன்னும் 15நாட்களில் இதற்கான தீர்வு கட்டாயம் கிடைத்துவிடும் என்று கூறினார்.

MUST READ