- Advertisement -
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
![]()
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று முதல் பிப்ரவரி 27 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் இயங்காது. விடுமுறை நாட்களில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
