மே 2026-ல், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் (TMC) பின்னடைவை சந்தித்துள்ளது.
மேற்கு வங்க அரசியல் சூழலில் பெரும் மாற்றத்தை சுட்டிக்காட்டும் வகையில், மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியான TMC பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி 152 தொகுதிகளில் நடைபெற்றது. தொடர்ந்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29 அன்று நடைபெற்றது. தற்போது வெளியாகி வரும் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, பவானிபூர் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் சுவேந்து அதிகாரி ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ளார். மொத்த நிலவரத்தைப் பொருத்தவரை, ஆளும் திரிணாமுல் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி Bharatiya Janata Party (பாஜக) கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
பாஜக – 154 தொகுதிகளில் முன்னிலை
திரிணாமுல் காங்கிரஸ் – 107 தொகுதிகளில் முன்னிலை
காங்கிரஸ் – 5 இடங்களில் முன்னிலை.
இடதுசாரி கூட்டணி – 2 இடங்களில் முன்னிலை. இந்த நிலை தொடர்ந்தால், மேற்கு வங்கத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும் சாத்தியம் உருவாகியுள்ளது. ஆரம்ப கட்ட முடிவுகள் தான் என்றாலும், மம்தா பானர்ஜியின் பின்னடைவு மாநில அரசியலில் முக்கியமான திருப்பமாக பார்க்கப்படுகிறது.
