சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக அதை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், காக்கி சட்டை என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். அதேசமயம் கடந்த ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்து சிவகார்த்திகேயனுக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. அதைத்தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் மதராஸி திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். மேலும் பாடல் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.
Announcement about our next drops today at 5 PM. Stay tuned!#SivakarthikeyanProductionsNext | @Siva_Kartikeyan | @KalaiArasu_ pic.twitter.com/FSMXFj3AZQ
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) April 9, 2025
இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்து தன்னுடைய டான், டாக்டர் போன்ற படங்களை தயாரித்திருந்தார். இது தவிர கனா, வாழ், குரங்கு பெடல், கொட்டுக்காளி ஆகிய படங்களை தன்னுடைய சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் இவரது தயாரிப்பில் உருவாகும் புதிய படம் தொடர்பான அறிவிப்பு இன்று (ஏப்ரல் 9) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.