- Advertisement -
2026-ஆம் ஆண்டுக்கான 3-வது அகில இந்திய காவல் துறையினருக்கான இறகுப்பந்து போட்டியில், தமிழக காவல்துறை சார்பில் பங்கேற்ற ஆவடி காவல் ஆணையரக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆணையர் டி. கலியசுந்தரம் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வீர் சாவர்க்கர் விளையாட்டு அரங்கில், நவம்பர் 19 முதல் 24-ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற்றன.
இதில் கலப்பு இரட்டையர் பிரிவில், காவல்துறை தலைவர் ராஜேஸ்வரியுடன் இணைந்து கலியசுந்தரம் பங்கேற்று சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் தமிழக காவல்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளார். தங்கப் பதக்கம் வென்ற உதவி ஆணையர் டி. கலியசுந்தரத்தை, ஆவடி காவல் ஆணையர் டி. செந்தில்குமார் நேற்று நேரில் அழைத்துப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.
